ஜாலி வசனங்களும், ஈர்க்கும் இசையும் – வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ டீசர் எப்படி?

0
479

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் நடித்துள்ள ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ மலையாளப் படத்தின் டீசரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham). படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தியான் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் எப்படி? – கேரளாவும், அதைத் தொடர்ந்து சென்னையிலும் நடக்கும் கதையாக படம் உருவாகியுள்ளது. ‘ஹிருதயம்’ படமும் சென்னையை களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் எம்ஜிஆரின் படமும், அதிமுகவின் கொடியும் காட்டப்படுகிறது. திரைப்படத்தை இயக்கும் நோக்கத்தில் சென்னை வரும் இருவரின் வாழ்க்கையை பற்றிய கதையாக இருக்கலாம் தெரிகிறது.

ட்ரெய்லரில் கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்னி விளக்கொளியில் கவர்கிறார். “இப்படியான ஒரு முட்டாள் தயாரிப்பாளர் இந்த ஜென்மத்தில் கிடைக்கமாட்டார்” என சொல்லி முடித்ததும் தயாரிப்பாளர் பெயர் வருவது என ஜாலியாக கடக்கிறது ட்ரெய்லர். பின்னணி இசை ஈர்க்கிறது. பிரணவ், பசில் ஜோசப், நீரஜ் மாதவ் என பல கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. பிரபல நடிகர்கள், ஸ்ரீனிவாசன் – மோகன்லாலின் மகன்களான வினீத் ஸ்ரீனிவாசன், பிரணவ் இணைந்துள்ள இப்படத்தில் ‘குரூப்பிசம், நெப்போடீசம்’ என இறுதியில் நிவின்பாலி பேசும் வசனம் கவனம் பெறுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here