யோகிபாபு நடித்த ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத், கிராமத்துப் பின்னணியில் இயக்கி இருக்கும் படம், ‘மனிதனும் தெய்வமாகலாம்’. செல்வராகவன், கவுசல்யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா என பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். வியோம் என்டர்டெயின்மென்ட் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ் சதீஷ் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்திடம் பேசினோம்.
Q
உண்மைச் சம்பவக் கதைன்னு...
Follow Us
விரைவில் அப்டேட் உடன் சந்திக்கிறேன், எந்தவித பிரச்சினையும் இல்லை என்று ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘கருப்பு’ படம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், நேற்றைய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று கூறியிருந்தார்...
‘இறுதிப்பக்கம்’ படத்தை அடுத்து இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், த்ரில்லர் கதையை மீண்டும் இயக்க இருக்கிறார். இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். “தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19-ல் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து...
தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவித்து, ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
நேற்று த்ரிஷா மறைமுகமாக பார்த்திபனை கடுமையாக சாடியிருந்தார். அதுமட்டுமன்றி இணையத்திலும் பலர் பார்த்திபனை திட்டித் தீர்த்தார்கள். இதற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. தனியார் விருது வழங்கும் விழாவில் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தேன்.
அப்போது த்ரிஷாவின் புகைப்படமும் திரையில் வந்தது. அதற்கு என்ன...
‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று...
நான் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். இப்போதும் அந்த நட்பு, அதே அன்போடு தொடர்கிறது. என்னை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள் என பெரும் வட்டம் அது.
அப்போது எனக்கு அறிமுகமானவர்களில் ஒருவர் வீரமணி. அவரை எங்கு, எப்போது முதன் முதலில் சந்தித்தேன் என்பது தெரியவில்லை. தென் மாவட்டத்துக்காரரான அவர் எம்.ஆர்.ராதாப்பாவின் நாடகக்குழுவில் இருந்திருக்கிறார். ராதாரவி அண்ணன் குடும்பத்துக்கு மிக வேண்டியவர்.
என் சகோதரி...
தான் மேடையில் பேசிய விவகாரத்துக்கு த்ரிஷா எதிர்வினையாற்றிய நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நான் பேசியது உண்மையிலேயே தவறிதான் நடந்தது. நான் மேடையில் விஜய் குறித்தோ அஜித் குறித்தோ பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு ஒரு புகைப்படம் வந்தது.
அதை பார்த்ததும் உண்மையிலேயே நான் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே...
பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர், ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். இப்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள கிம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைக்க ஞாயிற்றுக்கிழமை வந்தார். அவரைப்பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அவர்கள் மருத்துவமனைக்குள்ளும் புகுந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதுகாவலர்கள், அவர்களிடம் இருந்து ஜூனியர் என்டிஆரை மீட்டு அழைத்துச் சென்றனர். ரசிகர்களைக் கட்டுப் படுத்த...
பரத் நடித்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘காளிதாஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இதன் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில் இதையும் இயக்கியுள்ளார்.
இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் ஃபைவ் ஸ்டார் கே.செந்தில் மற்றும் டாக்டர்...










