‘ஹார்ட்​டின்’ படத்​தில் 2 வெவ்வேறு உலகம்

0
19

சனந்த், மடோனா செபாஸ்​டியன், இமயா நடித்துள்ள படம் ‘ஹார்ட்டின்’. ரொமான்​டிக் காமெடி படமான இதை அறி​முக இயக்குநர் கிஷோர் குமார் இயக்​கி​யுள்​ளார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்​.ர​வீந்​திரன், ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்​துக்கு முகேஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ராஜேஷ் முரு​கேசன் இசையமைத்​துள்​ளார். ஜூன் 26-ல் வெளியாகும் இப்​படத்​தின் இசை மற்​றும் முன்​னோட்ட வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

இயக்​குநர் கிஷோர் குமார் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் 2 வெவ்வேறு உலகங்​களைக் காண்​பித்​துள்​ளோம். படத்​தில் நடிகை இமயா​வின் பங்​களிப்பு அதி​கம். இதில் பெண் கதா​பாத்​திரங்​கள் சிக்​கலான​தாக​வும் உணர்​வுப்​பூர்​வ​மான​தாக​வும் இருப்​ப​தற்கு அவர்​களின் பங்​களிப்​பும் ஒரு காரணம்​. ‘காதலும் கடந்து போகும்’ படத்​தைப் பார்த்​ததும் மடோனா செபாஸ்​டியனுடன் இணைந்து பணி​யாற்ற விரும்​பினேன்.

இப்​படத்​தின் கதையை அவரிடம் 40 நிமிடம் விவரித்​தேன். நான் சொன்ன ஐடியா பிடித்​திருந்​தது. அவருடைய திரை​யுலக பயணத்தில் நினை​வில் நிற்​கத்​தக்க அளவுக்கு அற்​புத​மான கதா​பாத்​திரத்​தில் நடித்​திருக்​கிறார்.

இந்​தப் படத்​தில் சனந்த் கேரக்டருக்கு 2 வெவ்​வேறு வடிவங்​கள் இருக்​கின்​றன. இதனை அவருடைய அற்​புத​மான நடிப்பு திற​னால் வித்​தி​யாசப்​படுத்​திக் காட்​டி​யிருக்​கிறார். காதல் என்ற எமோஷன் எப்​போதும் மாறாது. எவர்​கிரீ​னாக இருக்​கும். இதற்கு முன் எத்​தனையோ காதல் கதைகள் வந்​திருந்​தா​லும் ‘ஹார்ட்​டின்’ தனித்து இருக்​கும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here