ஆன்மிக மாற்றம் தந்த ‘சின்ன சின்ன ஆசை’ – நடிகை மதுபாலா மகிழ்ச்சி

0
14

இந்திரன்ஸ், மதுபாலா நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இப்படம் பற்றி நடிகை மதுபாலா அளித்த பேட்டியில், “நான் நடித்த ‘ரோஜா’ பட பாடல் வரியையே இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். ‘சின்ன சின்ன ஆசை’ என்ற தலைப்பு மீண்டும் அந்த இனிய நினைவுகளை உயிர்ப்பித்தது. அதே நேரம் இது தனித்துவமான கதையுடன் உருவான உணர்வுபூர்வமான படம். இந்தப் படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

இதன் படப் பிடிப்புக்காக ஒரு மாதம் காசி நகரில் தங்கியிருந்த அனுபவம் ஆழமான ஆன்மிக மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நகரின் சூழல், கங்கை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை தன்னை ஆழமாக பாதித்தது. நடிகர் இந்திரன்ஸ் திரையில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்திலும் சிறந்த மனிதர். என் திரைப் பயணத்தில் சிறப்பான படங்களில் ஒன்றாக இப்படமும் இருக்கும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here