ஹாரர் காமெடி படமாக உருவாகும் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’

0
34

அறிமுக இயக்குநர் அபய் சங்கர் எழுதி இயக்கும் திரைப்படம் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது

திகில் , நகைச்சுவை மற்றும் காதல் ஆகிய பின்னணியில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது நபர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார். அங்கு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களும், அந்த வீட்டைச் சுற்றியுள்ள மர்மங்களுமே இப்படத்தின் மையக் கரு என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் கலேஷ் ராமானந்த் நாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகனின் தாயாக நடிகை கலாரஞ்சினி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் நாயர் எம்.எஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here