‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘ஆர்எக்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ரெஜினா கஸாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இப்படத்துக்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.














