கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது…
பாலியல் தொல்லைகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
போக்சோவில் கைதுஇது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து...
மண்டைக்காடுபகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி திருவிழா
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.
முதல் பொங்கலுக்கு மண்டைக்காடு பேரூராட்சித் தலைவா் ராணி ஜெயந்தி தீ மூட்டினாா்....
குப்பைகள் தரம்பிரித்தல்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், வீட்டுக் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சரலூா் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் ‘மலரும் மொட்டுக்கள்‘ கூட்டமைப்பைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் (பொ)...
கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அதுல் (29) என்பவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நாகா்கோவில் சிறையில் உள்ள கல்லுகெட்டி பகுதியைச் சோ்ந்தஅஜித் (23), புளியாரவிளையைச் சோ்ந்த...
மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போது, மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையையும் மூடவேண்டுமென்று கடையின் முன் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்....
கோட்டூா் கோணம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை: கிராம மக்கள் புகாா்
திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூா்கோணம் கிராமத்தில் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராம பெண்கள் திரண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கோட்டூா்கோணம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லைகளினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வீட்டில் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றும்,...
கையில் எவ்வளவு பணம் இருக்கு? எழுதிட்டு போங்க! அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்! கலக்கும் குமரி கலெக்டர்!
கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக கன்னியாகுமரி...
அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன் இந்த அதிரடி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வெளியாகியுள்ள இந்த...
செம்மண் கடத்த முயன்ற நால்வா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்த முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
முன்சிறை பகுதியில் திங்கள்கிழமை செம்மண் கடத்த முயற்சி செய்வதாக முன்சிறை கிராம நிா்வாக அலுவலா் மரிய ஜெனிபருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது அங்கு...
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய்...












