குமரியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர் விழிப்புணர்வு
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குமரி மாவட்ட காவல் துறையின்...
புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்
முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு...
குமரி: 2 கார்களில் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில், மீனவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டது...
திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் ரத்து
இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தக்கலை: கோயிலில் நகை பணம் திருடியவர் கைது
பரைக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சம்பவ தினம் இரவு மர்ம நபர் புகுந்து சாமி சிலையில் இருந்து சுமார் ஒரு கிராம் தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றார். இது குறித்து கோவில் துணைத்தலைவர் நெல்லியப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்...
திருவட்டாறு: பள்ளிவேன் மோதி ஒருவர் பலி
திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (63) தனது மனைவி சுசீலாவுடன் (60) சிறுநீரக டயலிசிஸ் சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஆட்டோ மீது மோதியதில் பால்ராஜ், சுசீலா மற்றும் ஆட்டோ...
குழித்துறை: நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
குழித்துறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாஜலபதி கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்றது. நெல்லை மண்டல அதிகாரி ரவீந்திரன், நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்...
கொல்லங்கோடு: அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
கிராத்தூர் பகுதியில் சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த ரெபேக்காள் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் இந்த சம்பவம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து...
குமரியில்: சிறுமிக்கு பாலியல் கொடுமை; வாலிபருக்கு சிறை
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் (29) என்பவர், 2019 ஆம் ஆண்டு 9 வயது பள்ளி மாணவியை மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றி காண்பிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த...
குமரி: 90 கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி துவக்கி வைத்தார்
குமரி மேற்கு மாவட்டங்களான களியக்காவளை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர்...













