மார்த்தாண்டம்: எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் வந்துள்ளனர். நேற்று மார்த்தாண்டம் போலீசுடன் இணைந்து, மார்த்தாண்டம் பேருந்து நிலையம் தொடங்கி குழித்துறை பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலமாக...
களியக்காவிளை: கோழிக்கடை உரிமையாளருக்கு வெட்டு வாலிபர் கைது
குழித்துறை அருகே கோழிக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின் (40) என்பவர், மது குடித்துவிட்டு வேலைக்கு வந்த ரஞ்சித் என்ற வாலிபரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஜெஸ்டினை வெட்டி காயப்படுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஜெஸ்டின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....
குமரி: தேர்தல் முன்னேற்பாடு கூட்டம் ; கலெக்டர் பங்கேற்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள அனைத்து...
இரணியல்: மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
கடந்த 2017 முதல் நெய்யூர், மாதா தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழக இரணியல் உப கோட்ட அலுவலகம், வரும் 13ஆம் தேதி முதல் செம்பொன்விளை துணை மின் நிலை வளாகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படவுள்ளது. இந்த தகவலை...
குமரி: கொலை முயற்சி; வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை
குலசேகரம், சுருளக்கோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சுரேஷ் (42) என்பவர், செந்தில் (41) என்பவரை வெட்டு கத்தியால் தலையில் வெட்டினார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நேற்று (மார்ச் 11)...
திக்குறிச்சி: ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றவர் பலி
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் குமார் (49) என்பவர், தனது நண்பருடன் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றபோது நீரில் மாயமானார். இது குறித்து குழித்துறை தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 4 மணியளவில் ஜஸ்டஸ் குமாரின் உடலை புல் செடிகளுக்கு...
கன்னியாகுமரி: அம்ரித் பாரத் ரயில் தொடக்கம்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்....
குமரி: ரயில் பாதைக்கு நீர்நிலைகள் மூடல் – ஆய்வு தொடக்கம்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தியதில் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் மூடப்பட்டதாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தமிழக முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் உத்தரவின் பேரில், நேற்று முதல் ரயில்வே துறை மற்றும் பாசனத்துறை உயர் அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு...
குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது எனத்...
மண்டைக்காடு: நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் இறுதி நாளான நேற்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை 13 மண்பானைகளில் மூடி, தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12:30 முதல் 1...













