Google search engine

கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்

குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி பங்குனி பரணி தூக்க திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் நிறைவு நாளான 22 ஆம் தேதி 1124 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற உள்ளது. இதற்காக, குழந்தைகளை தூக்கும் தூக்கக்காரர்களின் நமஸ்காரம்...

கொல்லங்கோடு: கோயில்விழா.. மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற தூக்க திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில், வரும் மார்ச் 22, 2026 அன்று கோயில் பகுதியைச் சுற்றியுள்ள நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு பகுதிகளில் உள்ள நான்கு மதுபான கடைகளை...

குமரி: நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், ரயில்வே போலீசார் பொதுமக்கள் தண்டவாளப்...

குமரி: மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்

கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று திடீரென மாயமானார். மருத்துவமனை வளாகம் முழுவதும்...

குமரி: 6 கம்பெனி துணை ராணுவம் கண்காணிப்பு தொடக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம் 6 கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வந்துள்ள துணை...

குமரி: சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இரவு தொடங்கிய சோதனையைத் தொடர்ந்து, சொகுசு கார்கள், அரசு மற்றும்...

குலசேகரம்: யோகா விழிப்புணர்வு ; 100 நாட்கள் பயிற்சி முகாம்

வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 100 நாட்கள் யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்மன் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி இந்த பயிற்சியை...

குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்கள் ஊழியர்களால் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால்...

குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி கத்ரீனா நாப் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த...

குமரி: ஆம்னி பஸ் பைக் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு பஸ் வள்ளி ஆற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும்...