ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி காவல்துறை அதிரடி

0
223

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் ‘நோ ஹெல்மெட் நோ என்ட்ரி’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இது குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அபராதம் விதிப்பதை விட, விபத்தின் கொடூரத்தை உணர்த்தி, உயிரிழப்புகளைத் தடுப்பதே தங்கள் நோக்கம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ‘ஜீரோ ஆக்சிடென்ட் குமரி’ என்ற இலக்கை அடைய பொதுமக்களின் ஒத்துழைப்பை காவல்துறை கோரியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here