Google search engine

குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை, உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர...

மார்த்தாண்டம்: சொத்து பிரச்சனை; தாய் மகன் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது, மெல்பின், மார்ஷல் மற்றும் சிபு ஆகியோர் தாய், மகனைத் தாக்கி காயப்படுத்தினர். படுகாயமடைந்த...

புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி

முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து மாணவி வின்சி புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி...

குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம் தேதி வாகன சோதனை நடைபெற்றபோது, தடையை மீறி கேரளா செல்ல முயன்ற 7...

கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை

கன்னியாகுமரி  உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு

பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய பணியாளர்கள் உட்பட 7 பேர்...

குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த ஆப்பிள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பழங்கள் மாயமாகியிருந்தன. இது குறித்து குளச்சல் போலீசில் புகார்...

குமரியில்: கோயிலில் கொதிக்கும் எண்ணெய், மஞ்சள் நீரால் அபிஷேகம்

குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர். விரதமிருந்த பக்தர்கள் அம்மன் அருள் வந்து சாமி ஆடியபடி, இந்த அபிஷேகத்தை தங்கள்...

களியக்காவிளை: ராகுல் காந்திக்கு எதிராக திமுக போராட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நேற்று (மே 6) இரவு...

ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்

தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் ஆதரவை தொடர்ந்து தற்போது தவெக வசம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இருந்தாலும்...