கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான தடை ஆக. 11 வரை நீட்டிப்பு
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல ஏற்கெனவே...
குமரி -துறைமுகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது மக்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி, தெரிசனங்கோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தாணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை...
மணலோடை ரப்பர் தோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மணலோடை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார், துறை ரீதியான அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தீவைக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ் கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த 18 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் சந்தா கட்டி வருகிறார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக நலவாரியத்தால் வழங்கப்படும் 20000 ரூபாய் பணபலம் வேண்டி கடந்து...
நாகர்கோவிலில் போதைப்பொருளை தடுப்பது குறித்து கலந்தாய்வு
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று கலெக்டர் அழகுமீனா தலை மையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை...
மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்
திருவனந்தபுரம் அமரவிளை குற்றி வேலி விளையை சேர்ந்தவர் குட்டப்பன்(53) , அவரது மனைவி ராஜம்(52) , ஆகிய இருவரும் கூட்டப்பனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுமணி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது குழித்துறை அரசு மருத்துவமனை அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு...
முஞ்சிறையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து ஆலயத்தை மட்டும் சீரழிக்கும் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை அருகே முஞ்சிறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார்....
ரேஷன்கடை பணியாளர்களை தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் எம். எல். ஏ. வுமான ராஜேஷ்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 - 2024 - ம் ஆண்டு வார நாள் பாடத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு பட்டய பயிற்சி...
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப. , அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.












