திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை முழுமையாக சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் குதித்துறை தனியார் ஆஸ்பத்திரி மட்டும் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி, அதில் வாலிபர்கள் நீந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் விஜய் வசந்த் அம்பு நேற்று அந்த பகுதியில் வந்து அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, – கன்னியாகுமரி வரை சாலையை முழுமையாக தார் போடுவதற்கு ரூபாய் 14 கோடி 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் உடனடியாக விடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்ல முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.