கன்னியாகுமரி: அரசு பணியாளர் குடியிருப்பின் அவலம் குறித்த வீடியோ வெளியீடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இடையே பாம்புகள், தேள் ஆகியவற்றின் தொல்லை இருப்பதாகவும், அரசு பணியாளர்கள் குடியிருப்பில் சாக்கடைகள் சாலையில் பாய்ந்து ஓடுவதாகவும் நாகர்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நேற்று சமூக...
தக்கலை: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (26). இறைச்சிக் கடையில் தொழில் செய்யும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவரது அறைக்...
குமரி: ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்களும்,...
நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (டிச,17) நடைபெற்றது. இதில் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் நிரம்பியுள்ளன.
இதனால் நாகர்கோவில் வரும் பயணிகளுக்கு வசதியாக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று இந்த பண்டிகை முடிந்த பின்பு நாகர்கோவிலில் இருந்து பயணிகள்...
குளச்சல்: பிரபல கொள்ளயன் கைது 30 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குளச்சல் டிஎஸ்பி (பொ) சந்திரசேகரன் மேற்பார்வையில், குளச்சல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தனிப்படையினர்...
தக்கலை: நள்ளிரவில் கண்டெய்னர் மோதி போலீஸ் படுகாயம்
தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி தேசிய சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலை போலீசார் வாகனங்கள் சோதனையில் இருந்தனர்.
அப்போது கண்டெய்னர் லாரிகளையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி டிரைவர் போலீசை பார்த்ததும் வாகனத்தை திடீரென நிறுத்த...
மார்த்தாண்டம்: குப்பைகளை சாலையில் கொட்டிய கடைகளுக்கு அபராதம்
குழித்துறை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும் தினசரி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவைகள் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இதற்காக ஷெட் கட்டப்பட்டு உயர்தரமான மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை...
புதுக்கடை: கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி சுதா (44). இவர்களுக்கு 11 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுதா மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று...
அருமனை: நகை பட்டறை உடைத்து 4.5 கிலோ வெள்ளி திருட்டு
அருமனை அருகே மேல்புறத்தை அடுத்த வெங்கனம்கோடு பகுதி சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
கடந்த 14 ஆம் தேதி இரவு பணி முடிந்து பட்டறை பூட்டி சென்றார். நேற்று(டிச.16) காலை 10 மணி அளவில் பட்டறை திறக்க பத்மநாபபிள்ளை வந்தார். அப்போது...












