குமரி காந்தி மண்டபத்தில் இன்று நண்பகல் விழும் சூரிய ஒளி

0
43

மகாத்மா காந்தி இறந்த போது அவரது உடல் டெல்லியில்  தகனம் செய்யப்பட்டு, பின்னர் அவரது அஸ்தி கலசம் ஒன்று 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கடற்கரையில் வைக்கப்பட்ட பின்பு முக்கடல் சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது.

கடற்கரையில் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் பின்னர் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி விழும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.

அதன்படி காந்தி ஜெயந்தி நாளான இன்று (2 -ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கூடத்தின் மீது சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here