கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து 1300 டன் நெல் மூட்டைகள் நேற்று (செப்.,30) சரக்கு ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு லாரிகளில் தொழிலாளிகள் ஏற்றி சென்றனர்.