தக்கலை: வக்கீல் வீடு புகுந்து தாக்கிய நா த க வினர் – கைது
சென்னையில் வக்கீலாக பணிபுரியும் கோழிப்போர் பகுதியை சேர்ந்த நெல்சன் (24) என்பவரை, சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜா பேரோன் உள்ளிட்ட 4 பேர் நேற்று அவரது வீட்டிற்கு வந்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கும்பல்...
திருவட்டாறு: கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை ; வாலிபர் கைது
திருவட்டாறு அருகே, ஏசி மெக்கானிக் ராஜேஷ் குமார் (32) என்பவர், ஒரு வீட்டில் ஏசி பழுது பார்க்க சென்றபோது, 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியான சைகை காட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி தனது பாட்டியிடம் கூறியதை அடுத்து, திருவட்டார் காவல் நிலையத்தில் புகார்...
நித்திரவிளை: மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு – வழக்கு
பூத்துறை, காருண்யபுரம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சைலன் (28), நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குச் செல்ல ஆட்டோவுக்காக சாலையோரம் காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மில்டன் (26) என்பவர் பைக்கில் வந்து ஏன் நிற்கிறாய் எனக் கேட்டு தாக்கியுள்ளார்....
பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை
மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு - சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பட்டாசு, தீப்பெட்டி போன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் தொழிற்சாலை...
குளச்சல்: கார் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர்...
மணவாளக்குறிச்சியில் பைக் மோதி மூதாட்டி படுகாயம்
மணவாளக்குறிச்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்பவர் நேற்று (ஏப்ரல் 29) வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குளச்சல் பூக்குழியைச் சேர்ந்த அன்சாருதீன் (19) ஓட்டிச் சென்ற பைக் மோதி படுகாயமடைந்தார். அவர் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி...
மார்த்தாண்டம்: பைக் – கார் மோதல்.. வாலிபர் படுகாயம்
குழித்துறை ஆர்சி தெருவைச் சேர்ந்த ஜீன் தாமஸ் (32) மற்றும் அவரது மனைவி ஷெரினா (30) நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கல்லுத்தொட்டி அருகே வேகமாக வந்த கார் மோதி ஜீன் தாமஸ் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள...
புதுக்கடையில்: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜெனிஷா நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் ஜெகதா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு...
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!
நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள்...
குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது
குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2024 ஆம் ஆண்டு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூர சம்பவம்...













