பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு

நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன் திற்பரப்பு அருவி அருகே, கோதையாற்றில் படகு சவாரி செய்தார். அப்போது, மற்றொரு படகில் வந்தவர்கள்,...

இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது

திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே பரிமணம் என்ற இடத்தில் உள்ள கார்மல் பவன் கிறிஸ்துவ ஆசிரமத்தில் பாதிரியாராக இருந்தார்....

தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு

நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர். கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு கி றிஸ்துவ சர்ச்சும் உள்ளது. கடந்த 2022 ஏப்., 29ல்...

கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி, பலா பழங்களை பறித்து தின்றுள்ளது. பழங்குடி மக்களும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து யானையை...

தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு...

குமரி: தேசிய போட்டியில் மாணவர் 2-ம் இடம்; கலெக்டர் பராட்டு

தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்றகளியக்காவிளை அருகே உள்ள மரியகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர் எஸ். ஆஷிக் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை...

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவகங்கள் தங்கள் சமையல் அடுப்புகள் மற்றும் பொருட்களை பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக கடைக்கு வெளியே வைக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும்...

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வெளியில் அடுப்பு போட்டு சமையல் செய்த அடுப்புகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்....

நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!

நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பெரும்...

ஞானதாசபுரம் குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்...