Google search engine

மணவாளக்குறிச்சி:   திருமணம் செய்து வைப்பதாக மோசடி

மணவளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் எலக்ட்ரீஷியன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு வேலைக்குச் சென்றார். அப்போது ராமச்சந்திரன் மகள் கார்த்திகா (25) என்பவருடன் கிருஷ்ணகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் கிருஷ்ணகுமார் கார்த்திகா மோதிரம் மாற்றினர். தொடர்ந்து...

குமரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் கோட்டார் வெள்ளாடிச்சிவிளை அருகே ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.  அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த...

அருமனை: மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

அருமனை அருகே செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (65). மீனவர். இவரது மனைவி அருள் ராணி (57) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.  இரண்டாவது மகன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். சமீபகாலமாக ஆல்பர்ட் தீராத நோயால்...

சித்திரம்கோடு:  காம்பவுண்ட் சுவர் உடைப்பு; வழக்கு பதிவு

திருவட்டார் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெயக்குமார் (51). தொழிலதிபர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சித்திரங்கோடு ஊற்றுப்பாறை பகுதியில் சொத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.  மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த...

குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நேர்காணல்

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு பொறியியல் துறையில், மாநில அளவில் திமுக பொறியாளர் அணியை வழிப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.  அதன் அடிப்படையில் பொறியாளர் அணி சார்பில் கியூ...

தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; ஒருவர் கைது

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அணுகி அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4.7 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால், அபிலாஷ் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததாகக்...

களியக்காவிளை: பாதை அடைப்பு; வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்

களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் வசித்து வரும் மூதாட்டி சந்திரிகா தேவி (65), இவர் தனது கணவன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மற்றும் மருமகள், பேத்தி கைக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சந்திரிகா தேவி வீட்டிற்கு செல்ல பரம்பரை பரம்பரையாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல்...

எழுதேசப்பற்று: அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

நித்திரவிளை அருகே ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை (யு.கே.ஜி.) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெல்பின் மேரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற...

திங்கள்நகர்: கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

திங்கள் நகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில் இன்று காலை கோவில் ஊழியர் ஐயப்பன் என்பவர் கோவில் கதவை திறந்து...

நித்திரவிளை: பெண்மைக்கு களங்கம்; முதியவர் மீது வழக்கு

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புத்தன் வீட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டீபன் (65). இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது.  இதனால் ஸ்டீபன் ஹேமமாலினியைப் பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள்...