திங்கள் நகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை கோவில் ஊழியர் ஐயப்பன் என்பவர் கோவில் கதவை திறந்து பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைந்து கிடந்தது கண்டுபிடித்தார். உடனடியாக உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து அவர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பஸ் நிலைய காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பின்புற வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த குத்துவிளக்குகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் உண்டியல் பணம் சுமார் 10,000 ரூபாய் போன்றவற்றை திருடி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.