குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். அவ்வாறு பெண்களிடம் ஏமாற்றிய பணத்தில் சொகுசு கார்கள், சொகுசு...

கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். செல்போன் பறிமுதல்-மன உளைச்சல் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச்...

கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து – 7 பேர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பொருட்காட்சியை காண வந்திருந்தனர்....

பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வாலிபர் போக்சோவில் கைது மேலும், மாணவியின் ஆபாச...

தக்கலை அருகே வீட்டின் முன் தொழிலதிபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மனைவி சென்னையில் ஆசிரியையாகவும், மகன் அரசு வங்கியில்...

“தக்கலை அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் – தலைமையாசிரியர் இடமாற்றம்”

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. மாணவியின் ஆண் நண்பர் மதுபாட்டில் மற்றும் உணவு வாங்கிக்...

2,700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக...

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ. 46 லட்சம்...

கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நீதி கேட்டு நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வாசலில் காத்திருந்த மூதாட்டியை,...

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும்...