Google search engine

குமரி: கோவில் சமய மாநாடு; உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கினார்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 89வது சமய மாநாடு துவக்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இளைய தலைமுறையினருக்கு பக்தியை கற்றுக்...

அருமனை: தூக்கில் அழுகிய நிலையில் பெயிண்டர் சடலம்

அருமனை, கிராங்கோணம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் மதுசிவசங்கரப் பிள்ளை கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அருமனை போலீசார் உடலை மீட்டு பிரேத...

மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது

மேல்புறம், பாகோடு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜஸ்டஸ் (53) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபின் (23) மற்றும் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஜஸ்டஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில்...

கொல்லங்கோடு: 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அருண் (33) மற்றும் அவரது மனைவி ரீனா, இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு மாயமாகியுள்ளனர். ரீனா தனது மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு...

நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த சாமிதாஸ் (63) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில்...

மண்டைக்காடு கோவில் விழா; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உட்பட...

புதுக்கடை: விபத்து; அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் காயம்

நேற்று மார்த்தாண்டத்தில் ஷாஜி (32) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், முஞ்சிறை பகுதியில் பிரேம்குமார் (62) ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். பிரேம்குமார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஷாஜி மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையிலும்...

கருங்கல்: ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 6 பேர் கும்பல்

நேற்று முன்தினம் மணலி பகுதியைச் சேர்ந்த நெசில் என்பவர், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் ஏசுதாஸை (42) சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும், நெசில் மேலும் 5 பேருடன் சேர்ந்து ஜான் ஏசுதாஸை தாக்கி, அவரிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள செல்போன்...

நாகர்கோவிலில் நல்லகண்ணுவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி

வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி...

குமரி: அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் முன்னிலையில் உபகரணங்கள்

குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். மத்திய அரசு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 63.69 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், ஐ.ஆர்.இ.எல். முதன்மை பொது மேலாளர் மற்றும்...