மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த...
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன?
admin - 0
‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக்...
காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு
admin - 0
காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், "பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு...
சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப்,...
ஸ்வீடனில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி.
இந்த பள்ளியில் செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும்...
மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும்...
அயர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
அயர்லாந்து நாட்டின் கார்லோவ் நகருக்கு அருகில் உள்ள கிரேகுவெனாஸ்பிடோகே என்ற இடத்தில் கருப்பு நிற ஆடி ஏ6 ரக கார் கடந்த வெள்ளிக்கிழமை, மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த செருகுரி சுரேஷ் சவுத்ரி, பார்கவ் சித்தூரி ஆகிய 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று...
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2023-24) இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ல் 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்து, 26.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டை விட 10 சதவீத உயர்வு...
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரத மர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த 27-ம் தேதி இரு தலைவர்களும் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. எப்போது இந்தியா வந்து சேகிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை.
இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி சுமார்...










