தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது.
காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம்...
பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர்...
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, "தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது. எனவே, முன்பு இருந்தது போலவே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் முழுமையாக மீண்டும் விதிக்கப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
மேற்கு...
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள்...
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டது.
இதை கண்காணிக்க அமெரிக்க கடற்படையின் எம்கியூ-4சி டிரைட்டன் என்ற ஆளில்லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாயமானது. இந்த ட்ரோன் சுட்டு...
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
admin - 0
ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த போரில் இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்பவர்...
ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மர்மமான வர்த்தகங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, சந்தையில் பெரும் முதலீடுகள் செய்யப்படும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா மீதான தாக்குதல், ஈரான் மீதான தாக்குதல், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சில...
“ஒரு முழுமையான உடன்பாடு எட்டப்படும் வரை…!” – போர் நிறுத்தத்துக்கு ஊடே ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
admin - 0
“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், “ஏற்கெனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் அவசியமான அமெரிக்காவின் அனைத்து போர்...
ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் ராணுவம் அறிவித்தது.
கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப்...
“நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும்” என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக்...










