Google search engine
மத்​திய கென்​யா​வில் ஒரு பெண்​கள் பள்​ளி​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 16 மாணவி​கள் உயி​ரிழந்​தனர். மத்​திய கென்​யா​வின் கில்​கில் பகு​தி​யில் உது​மிஷி பெண்​கள் பள்ளி உள்​ளது. இந்த உறை​விடப் பள்​ளி​யில் 800-க்​கும் மேற்​பட்ட மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தப் பள்​ளி​யின் மாணவிகள் விடு​தி​யில் இரவில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 16 மாணவி​கள் உயி​ரிழந்​த​தாக​வும் மேலும் 79 பேர் காயம் அடைந்ததாக​வும் அந்​நாட்டு கல்வி அமைச்​சர் ஜூலியஸ் ஒகாம்பா...
ஈரானின் ஜாஸ்க் துறை​முகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்​.​வி.ஹார்​பர் பீனிக்ஸ் என்ற எண்​ணெய் கப்பலை ஈரான் கடற்​படை தடுத்து நிறுத்​தி​யது. இதையடுத்து அதில் இருந்த இந்​திய மாலுமிகள் 10 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் தொடர்ச்​சி​யான தூதரக முயற்​சிகள் காரண​மாக இந்​திய மாலுமிகள் 10 பேரும் விடு​தலை செய்​யப்​பட்​டுள்​ள​தாக கப்​பல் போக்​கு​வரத்து இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது. இது குறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில், “ஈரா​னால் விடுவிக்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள்...
ஐ.​நா. அமை​திப் படை​யில் பணி​யாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்​திய வீரர்​களுக்கு உயரிய விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 1948-ம் ஆண்​டில் ஐ.நா. அமை​திப் படை தொடங்​கப்​பட்​டது. ஐ.நா. சபை​யின் 120 உறுப்பு நாடு​களை சேர்ந்த 97,000 வீரர்​கள் அமை​திப் படை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். சமீபத்​திய புள்​ளி​ விவரத்​தின்​படி சுமார் 5,000 இந்​திய வீரர்​கள் ஐ.நா. அமை​திப் படை​யில் உள்​ளனர். உள்​நாட்​டுப் போரால் பாதிக்​கப்​பட்டு உள்ள காங்​கோ​வில் ஐ.நா. அமை​திப்...
எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக இந்​தி​யா, சீனா இடையே 35-வது சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்ளத் ​தாக்​கில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் 20 இந்​திய வீரர்​கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்​தில் சுமார் 45 வீரர்​கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரி​வித்​தது. கல்​வான் மோதலால் இந்​தி​யா, சீனா இடையே போர் பதற்​றம் எழுந்​தது. எனினும்...
 ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது....
 காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியை மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 70 சதவீத பகுதியை ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே தற்போதைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக காசாவின் 50...
அமெரிக்கா நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்பதால் சண்டை நிறுத்​தம் கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​பு​கிறார். இதற்​காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஈரானில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனியம் ஒப்​படைக்​கப்பட வேண்​டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்க்​கிறார். ஈரான் மீதான பொருளா​தார தடைகள் நீக்​கப்​பட்​டு, முடக்​கப்​பட்ட சொத்​துக்​கள் விடுவிக்​கப்பட வேண்​டும் என ஈரான் விரும்​பு​கிறது. இதுகுறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்​தினம் அந்த நாட்​டின் அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​ய​தாவது: ஈரானில் அடுத்​தடுத்து இரண்டு அரசுகள் மறைந்​து​விட்​டன. தற்​போது 3-வது அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். அவர்​கள் தற்​போதைய சூழலை நன்​றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்​கம் 250% அதி​கரித்து இருக்​கிறது. அந்த நாட்​டின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்கிறது. அவர்​களின் கரன்சி மதிப்​பிழந்​து​விட்​டது. அமெரிக்கா​வின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள...
ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த...