அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம்...
டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புது வியூகம்: நபருக்கு தலா ரூ.90 லட்சம் வழங்க முடிவு
admin - 0
ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
ஆர்டிக் பகுதியில் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு அமைந்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக கிரீன்லாந்து பரந்து விரிந்துள்ளது.
கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆர்டிக் பகுதியில் மிக நீண்டகாலமாக ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அண்மைகாலமாக...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.
வரி விதிப்பு தொடர்பாக இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு...
ரஷ்யாவும் உக்ரைனும் 2022 பிப்ரவரி முதல் போரிட்டு வருகின்றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு கடும் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் நேற்று கூறுகையில், “36 ஏவுகணைகள், 242 டிரோன்களை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்” என்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்...
மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை எட்டினோம்.
இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க...
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர்.
இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல்?
admin - 0
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை...
‘‘வங்கதேச மாணவர் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு எனக் கூறுவது அடிப்படையற்றது’’ – ஷேக் ஹசீனா
admin - 0
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், ‘‘ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான, கண்டிக்கத்தக்க செயல். வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின்...
புரதத்துக்கு ‘யெஸ்’, சர்க்கரைக்கு ‘நோ’ – அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’
admin - 0
அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராபர்ட் கென்னடி ஜூனியர், அமெரிக்கர்களுக்கான புதிய ஊட்டச்சத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கர்கள் தங்கள் உணவில் அதிக புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வேளாண் துறை மற்றும் சுகாதாரம், மக்கள் சேவைகள் துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களுக்கு இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, அமெரிக்கர்கள்...
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரி விதிப்பு – மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
admin - 0
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நேற்றுமுன்தினம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விவகாரத்தில்...
