Google search engine
இந்​தி​யாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட வலைகளங்​களை அமெரிக்கா முடக்கி உள்​ளது. இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதிகாரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியதாவது: இந்​தி​யாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்​பட்ட இணை​யதளங்​களில் மருந்து மற்றும் போதைப் பொருட்​கள் விற்​ப​தாக பல்​வேறு புகார்கள் வந்​தன. இதையடுத்து மருந்​துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்​வாளர்​கள்,...
டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார். இதுகுறித்து செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அவர் அளித்த பேட்​டி: செயற்கை நுண்​ணறி​வுத்​துறை என்​பது மிக​வும் வேக​மாக வளர்ந்து வரும் ஒரு துறை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதனால் பல நன்​மை​களும்,...
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்...
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர். மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....
பாகிஸ்​தானில் பலுசிஸ்​தான் விடு​தலைப் ​படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிர​வா​தி​கள் இரு​வர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர். இங்கு கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற மோதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் 200 பேர் உயி​ரிழந்​த​தாக பிஎல்ஏ தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்​தில் தன்​னாட்சி கோரி பிரி​வினை​ வா​தி​கள் போராடி வரு​கின்​றனர். இதனால் அங்கு பலுசிஸ்​தான் விடு​தலைப் படை​யினருக்​கும், பாகிஸ்​தான் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே நீண்​ட​கால​மாக மோதல் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் பலுசிஸ்​தானில்...
இசைத் துறை​யில் சாதனை படைப்​பவர்​களுக்கு அமெரிக்க ரிக்​கார்​டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரு​கிறது. திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய்​ லா​மா​வின்​(90) உரைகள், கதைகள், தியானங்​கள் ஆகியவை தொகுக்​கப்​பட்டு ஆடியோ புத்தக​மாக வெளி​யாகி​யுள்​ளது. சிறந்த ஆடியோ புத்​தகம் பிரிவில், தலாய்​ லா​மா​வின் உரைகள் அடங்​கிய ஆடியோ தேர்வு செய்யப்பட்​டது. அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற 68-ம் ஆண்டு கிராமி விருது விழா​வில் தலாய்லாமாவுக்கு கிராமி விருது...
‘விக்கி லீக்ஸ்’, ‘பனாமா லீக்ஸ்’ என்று இந்த உலகம் பல்வேறு ஆவணக் கசிவுகளைக் கண்டுள்ளது. அவையெல்லாம் அரசியல், சொத்து விவரங்கள் தொடர்பானதாகவே இருந்துள்ளன. ஆனால், ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ அல்லது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்ற ஆவணம் அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிபர்கள், அரசியல் புள்ளிகள், பிரிட்டன் இளவரசர், டெக் ஜாம்பவான்கள் எனப் பலரின் பெயரையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. தங்களின் சமூக அந்தஸ்தையும், அதற்குத் தேவையான தார்மிக ஒழுக்கத்தையும் தாண்டி, கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட...
ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் மாஸ்​கோ​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதலை நிறுத்​து​வது தொடர்​பாக இந்​திய அரசிட​மிருந்து எங்​களுக்கு எந்த தகவலும் வரவில்​லை. இந்​தி​யா​வுட​னான உறவை அனைத்து நிலைகளி​லும் தொடர்ந்து மேம்​படுத்​தவே ரஷ்யா விரும்​பு​கிறது" என்​றார். ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்​டாரங்​கள் கூறுகை​யில், "இந்​திய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​களிட​மிருந்து ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​வது தொடர்​பான எந்​தவொரு அறி​விப்​பும் இது​வரை வெளி​யாக​வில்​லை" என்று தெரி​வித்​தன.
காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன. காங்​கோ​வின் வடக்​குப் பகு​தி​யில் எம்23 என்ற கிளர்ச்​சிக் குழு செயல்​படு​கிறது. இந்த குழு கோமா,...