18 வயதில் உலகின் இளம் பேராசிரிய​ராக மாறி சாதனை படைத்​துள்​ளார் அமெரிக்​காவைச் சேர்ந்த இளைஞர். அமெரிக்​கா​வின் புளோரி​டாவைச் சேர்ந்​தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்​களில் உலகின் மிக இளம்​வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்​னஸ் புத்​தகத்​தில் இடம்​பெற்​றுள்​ளார். இதன் மூலம், 306 ஆண்​டு​ சாதனையை முறியடித்​துள்​ளார். இதற்​கு​முன், 1717-ம் ஆண்​டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவி​யேற்று ஸ்காட்​லாந்து கணித​விய​லா​ளர் கோலின் மெக்லாரின் மிக இளம்​வயது...
உக்​ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். போர் நடத்த ரஷ்யா​வுக்கு நிதி ஆதா​ர​மாக இருப்​பது அதன் கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு ஆகிய வளங்​கள் ஆகும். எனவே, ரஷ்​யா​விடம் இருந்து பிற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை தடுத்​து​விட்​டால், ரஷ்​யா​வுக்கு போர் நடத்​தத் தேவையான நிதி கிடைக்​காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்​தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளா​தார தடைகளை விதித்ததுடன்,...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதி​ரான பேரணி​யில் பாது​காப்பு படை​யினர் நடத்​திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதி​கரித்து வரும் வாழ்க்​கைச் செல​வு, நிர்​வாக அலட்​சி​யம், சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான அரசி​யல் பாகு​பாடு மற்​றும் அத்​து​மீறல்​களுக்கு எதி​ராக, கடந்த மாதம் முதல் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையி​லான சட்​டப்​பேரவை தேர்​தலை புறக்​கணிக்​கு​மாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி)...
பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் சீனா எல்லைப் பகு​தி​யில் உள்ள காரகோரம் மலைத்​தொடரில், உல​கின் 12-வது மிக உயர்ந்த சிகர​மான ‘பி​ராட் பீக்’ அமைந்துள்ளது. புகழ்​பெற்ற நேபாள வம்​சாவளி மலை​யேற்ற வீர​ரான நிர்​மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்​ளிட்ட 6 பேர் அடங்​கிய குழு​வினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்​குப் பகுதி பாதை​யில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்​தில் கடந்த வெள்​ளிக்​கிழமையன்று திடீரென பனிச்​சரிவு ஏற்​பட்​டது....
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால்,...
ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர். ஐரோப்​பிய கண்​டத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்​கோ​வும் அண்டை நாடு​களாக உள்​ளன. முஸ்​லிம் நாடான மொராக்​கோ​வில் வறுமை, வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக மொராக்கோ மக்​கள், வளமான ஸ்பெ​யின் நாட்​டுக்​குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வரு​கின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்​களில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 9,000...
 பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியின் போது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள கபல் காவல் நிலையம் அருகே ஸ்வாத் அமைதி ஜிர்கா என்ற உள்ளூர் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திதுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தீவிரவாதத்திதுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றபோது, காவல் நிலையம்...
மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடங்​கியது. கடந்த ஏப்​.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆனால், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சென்ற சில சரக்கு கப்​பல்​கள் மீது...
 சீனா​வின் பல துறை​களி​லும் இந்தியர்கள் கனிச​மாக பணி​யாற்​றுகின்​றனர். இவர்​கள் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் சார்​பில் முதல் முறை​யாக ‘திறந்த வெளி’ ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் இந்​தி​யத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோ​சகர்​கள் நிதின் ஜீத் சிங் மற்​றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்​களிடம் கருத்து கேட்​டனர். இதில் பங்​கேற்ற இந்​தி​யர்​கள் கூறிய​தாவது: சீன...