ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல்...
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு: ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி உறுதி
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்திய எண்ணெய்க் கப்பல்கள் பயணத்தைத் தொடர்ந்தன.
ஆனால், ஈரானிய புரட்சிகர காவல் படை ஒரு கப்பல் மீது துப்பாக்கிச்...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே...
உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதலால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது.
ரஷ்யாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழில் கச்சா எண்ணெய் விற்பனையும் முக்கியமானது. அதனால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகள், துறைமுகங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவில் உள்ள 10 பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டுவாப்சி சுத்திகரிப்பு நிலையம், ரோஸ்நெஃப்ட் சுத்திகரிப்பு மையம் ஆகியவையும்...
ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரானிடம் முதல் முறையாக சீனா வலியுறுத்தல்
admin - 0
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக் சியுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளதாவது: தற்போதைய சூழல் மோதலுக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அமைதிக்கான ஒரு...
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் மிகச்சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்.
தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல் 10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்....
பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர். இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்திச் சேனல் அலுவலகத்துக்கு வெளியில் அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஹம்சா தாக்குதலுக்கு...
தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு
admin - 0
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தண்ணீர் திருவிழாவின்போது சாலை விபத்துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாய் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘சோங்க்ரான்' என்ற சொல் இந்தியாவின் சங்கராந்தி என்ற வார்த்தையுடன் ஒத்துப்போகிறது. தெற்காசியாவின் பல இன மக்களிடையே புத்தாண்டு இந்த சமயத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும்...
உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது 700 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு
admin - 0
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தவில்லை. தற்போது உக்ரைன் மீது மீண்டும் மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நேற்று முன்தினம் நடத்தியது. உக்ரைன் தலைவர்...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி...










