உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது 700 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு

0
21

உக்ரைன் தலைநகர் கீவ் பகு​தி​யில் குடி​யிருப்​பு​கள் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் 700 ட்ரோன்​கள் மற்​றும் ஏவுகணை​கள் மூலம் பல மணி நேரம் தாக்​குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயி​ரிழந்​தனர், 80 பேர் காயம் அடைந்​தனர்.

கடந்த சில வாரங்களாக உக்​ரைன் மீது மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நடத்​த​வில்​லை. தற்​போது உக்​ரைன் மீது மீண்​டும் மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நேற்று முன்​தினம் நடத்​தி​யது. உக்​ரைன் தலை​வர் கீவ் பகு​தி​யில் உள்ள அடுக்கு மாடி குடி​யிருப்​பு​களை நோக்கி 700 ட்ரோன்​கள் மற்​றும் ஏராள​மான ஏவு​கணை​களை ரஷ்யா பல மணி நேரம் வீசி​யது.

காலை முதல் இரவு வரை நடை​பெற்ற தொடர் தாக்​குதலில் 16 பேர் உயி​ரிழந்​தனர், 80 பேர் காயம் அடைந்தனர். நான்கு ஆண்​டு​களுக்கு மேலாக ரஷ்யா நடத்தி வரும் தாக்​குதலில் உக்​ரைன் மக்​கள் 15,000 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக ஐ.நா தெரி​வித்​துள்​ளது. வான் பாது​காப்பு ஆயுதங்​களை அதி​கள​வில் வழங்​கக் கோரி ஜெர்​மனி மற்​றும் நார்வே நாடு​களுக்கு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி 2 நாள் பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

இந்​நிலை​யில் ரஷ்யா இந்த மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யுள்​ளது. உக்​ரைன் உள்​நாட்​டில் ட்ரோன்​கள் மற்​றும் ஏவு​கணை​களை உரு​வாக்கி வரு​கிறது. ஆனால், அவை அமெரிக்​கா​வின் பேட்​ரி​யாட் ஏவு​கணை​களுக்கு நிக​ராக இல்​லை. ஆயுத பற்​றாக்​குறை மட்​டும் அல்​லாமல் போர் காரண​மாக நிதி நெருக்​கடி​யிலும் உக்​ரைன் சிக்​கி​யுள்ளது.

ஐரோப்​பிய யூனியன் 90 பில்​லியன் யூரோ கடன் அளிப்பதாக உறுதி அளித்​திருந்​தது. ஆனால் ஹங்​கேரி எதிர்ப்​பால் இந்​தக் கடன் நிலு​வை​யில் உள்​ளது. இதை விரை​வில் வழங்​கும்​படி உக்​ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் போர் காரண​மாக அமெரிக்க ஆயுதங்​களின் கையிருப்பு குறைந்து வரு​வதும், உக்​ரைனுக்கு அமெரிக்க ஆயுதங்​கள் கிடைப்​ப​தில் சிக்​கலை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஆயுத உதவி அளிப்​ப​தாக உறுதி அளித்த பல நட்பு நாடுகள் கைவிரித்து விட்டதாக அதிபர்​ ஜெலன்​ஸ்​கி கூறியுள்ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here