Google search engine
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார். இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன. இந்தச் சூழலில்...
ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா....
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ், “அமைதிப்...
பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத் திறப்​பது குறித்​தும் இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி தரும் வகை​யில் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​கள்...
அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்​தது. இதில் 2.5 லட்​சம் பேரல் மெத்​த​னால்...
பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே மருத்​துவ சாதனத்தை பல நோயாளி​களுக்கு பயன்​படுத்​துதல் என பல்​வேறு பாதுகாப்​பற்ற நடை​முறை​களை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது. இதுவே எச்​ஐவி பரவலுக்​கும் வழி​வகுத்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது. தவுன்​சா​வில் 8 வயது சிறு​வன் எச்​ஐவி தொற்று உறு​தி செய்​யப்​பட்ட சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தான். இறுதி நாட்​களில்,...
ஹார்முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று சவுதி அரேபியா வலி​யுறுத்தி வரு​கிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்​கா, ஈரான் இடையே நடை​பெற்ற அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புறத்​தி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் முடக்​கியது. ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் எந்​தவொரு கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முடி​யாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. “இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார். இந்நிலையில், ஈரான்...
கத்​தோலிக்க திருச்​சபை தலை​வர் போப் பற்றி விமர்​சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்​களில், தன்னை இயேசு​வாக சித்​தரிக்​கும் ஏஐ புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்​தினம் கத்​தோலிக்க திருச்​சபை​யின் தலை​வர் போப் 14-ம் லியோ பற்றி செய்​தி​யாளர்​களிட​மும் சமூக வலை​தளங்​களி​லும் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார். தான் போப்​பின் ரசிகர் அல்ல என்​றும் அவர் சிறந்த முறை​யில்...
ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பிலும் 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சுமார் 21...