Google search engine
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டாலர் (ரூ.8.4 கோடி) ஆகும். அதேபோல்,...
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின்னர் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடைமைகள், கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.இதனிடையே இந்துக்கள் மீதானதாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக...
மனித நாக்கின் நிறத்தை வைத்துநீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் 98%மிக துல்லியமாக கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்டியு) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதற்கான புதிய இமேஜிங் சிஸ்டத்தை வடிவ மைத்துள்ளன.இதுகுறித்து இணைப் பேராசிரியர் அலி அல்-நாஜி கூறியதாவது: மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீரிழிவு,பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98...
வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட் டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. டாக்காவின் முக்கியமான மற்றும் பரபரப்பான மவுச்சக் பஜார் அருகே அமைந்துள்ள 583 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரி காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது அந்த கோயிலுக்கு வன்முறையாளர்களால் எந்த ஆபத்தும் நேராத வகையில்...
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது:வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவைதங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை...
வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க மாணவர் சங்கங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இது நாடுமுழுவதும் பெரும் கலவரமாக மாறியது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சூழலில் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் 4...
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்ய நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்ட மொசாட் அதனை எந்தவித பிசகலும் இல்லாமல் ஈரானில் செய்து முடித்தது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தனது பாலஸ்தீன எதிரியை பற்பசையின் மூலமாக தீர்த்துக் கட்டியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு ஏர்பிரான்ஸ் விமானத்தை கடத்தியதற்கு மூளையாக செயல்பட்டவர் வாதி...
டாக்காவைச் சேர்ந்த சமூகவியல்மாணவர் நஹித் இஸ்லாம். வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை இவர்தான் தலைமையேற்று ஒருங்கிணைத்துள்ளார். அவரின் போராட்டம் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வைத்துவிட்டது. 1998-ல் டாக்காவில் பிறந்த நஹித் திருமணமானவர். பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்களின் முக்கிய போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நஹித். போராட்டத்தின் போதுநஹித் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் கலவரமாக மாறியது. அதன் பிறகுதான் ஷேக் ஹசீனா...
கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள்...