வங்கதேசத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி...
வங்கதேசத் தேர்தலில் பிஎன்பி கட்சி மூத்த தலைவரும், இந்து மதத்தைச் சேர்ந்தவருமான காயேஷ்வர் சந்திர ராய் போட்டியிட்டார். டாக்கா-3 தொகுதியில் போட்டியிட்ட அவர் மொத்தம் 99,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் வங்கதேச முன்னாள் அமைச்சர் ஆவார்.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வரும் வேளையில், சிறுபான்மையினராக இருக்கும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் தலைநகர் டாக்காவில் உள்ள தொகுதியில் வெற்றி...
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்' மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில், மூன்று சிறுவர்கள் கே.எஃப்.சி உணவகத்தில் கோழி இறைச்சியை உண்டுவிட்டு, மீதமிருந்த எலும்புகளை வீணாக்க விரும்பாமல் அதனைச் சாதத்துடன் கலந்து ஒரு ஆதரவற்ற முதியவருக்கு வழங்குகின்றனர். ”இன்று நாம் ஒரு நற்செயல் செய்யப் போகிறோம்” என்ற பின்னணி குரலுடன் அந்த...
வங்கதேசத்தில் மேலும் ஒரு வர்த்தகர் கொடூர கொலை – இந்துக்களின் பாதுகாப்புக்கு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்
admin - 0
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து வர்த்தகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்து அரிசி வர்த்தகர் சுஷேன் சந்திர சர்க்கார் (62) கொடூரமான முறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப்...
கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய அவையில் உரையாற்றிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘கடந்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால், தனது மூலோபாய நலன்களுக்காக அமெரிக்கா, பாகிஸ்தானை சுரண்டியது. அதன் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, கழிப்பறை காகிதத்தைப் போல கருதியது.
1999க்குப் பிறகு...
கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தம்ப்ளர் ரிட்ஜ் என்ற நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு வீட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர்...
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் இடம் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில், அப்பகுதியை சீரமைக்கும் பணிகளில் பாகிஸ்தான் விமானப் படை ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஜனவரி 28 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, சேதமடைந்த ஹேங்கரின்...
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்
admin - 0
இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்தப் பையில் தலா 8 கிராம் எடையுள்ள நான்கு 22 காரட்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார்.
ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பிப்ரவரி 8-ம் தேதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி,...


