ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே லீக் சுற்றை தலா 18 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்திருந்தன. நிகர ரன் விகித அடிப்படையில் ஆர்சிபி அணி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே இந்த...
“பந்துவீச்சே எங்கள் பலம்… தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்த முயற்சிப்போம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
admin - 0
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தரம்சாலாவில் இன்று நடைபெறும் தகுதி சுற்று 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: ஐபிஎல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலானது. ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கின்றன. எல்லைக்கோடுகள் சிறியதாக உள்ளன. அதோடு பனிப்பொழிவும் இருக்கிறது. வேகப்பந்து...
அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து (2026) தொடருக்கான ஸ்பெயின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர் லாமைன் யமால் இடம்பிடித்து அசத்தி உள்ளார்.
வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளானா நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், வைல்டு கார்டு வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் எமர்சன் ஜோன்ஸுடன் மோதினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆடத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்வியா டெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று...
வியட்நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அக் ஷய் 4-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் எலமன் அமன்கெல்டியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
97 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விக்கி 7-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஷெர்சோத் பொயனோவ்வை வீழ்த்தி தங்கம் வென்றார். 53 கிலோ எடைப் பிரிவில்...
ஐபிஎல் 2026 தொடரின் 70-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, தொடக்க வீரர் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் (60...
ஐபிஎல் போட்டியில் சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 51 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம்...
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்துள்ள பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங்குக்கு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஆடவர் ஒட்டப்பந்தயத்தில் 25 வயதான குரிந்தர்வீர் சிங் 10.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம் 100 மீட்டர்...
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 7-வது இடம், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் கடைசி இடம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எலஎஸ்ஜி) அணி பின்னடைவைக் கண்டுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார்.
ரிஷப் பண்ட் கேப்டன்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 போட்டிகளில் தோற்றும், 10-ல் வெற்றி பெற்றும் உள்ளது. இந்நிலையில்,...
ஐபிஎல் 2026 தொடரின் 67-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய...










