ஆப்கன் உடனான முதல் டெஸ்ட்: வங்கதேச அணி 317 ரன் குவிப்பு

0
25

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 84 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களான தன்ஸித் ஹசன் 83, ஷத்மான் இஸ்லாம் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 53 ரன்கள் சேர்த்தார். மொமினுல் ஹக் 39, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 29, முஸ்பிகுர் ரகிம் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 24, ஹசன் மஹ்மூத் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நயீம் ஹசன் 11, தைஜூல் இஸ்லாம் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது சலீம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். யாமின் அகமத்ஸாய், இஸ்மத் ஆலம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க வங்கதேச அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here