ரிஷப் பந்த் சிக்சர் விருந்தும், கவாஸ்கருக்கு அடுத்தாக கே.எல்.ராகுலும்!

0
21

வெல்லிங்டன் டெஸ்ட்டில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 720 ரன்களைக் குவித்தது நியூஸிலாந்து மண்ணில் எந்த அணியும் சாதிக்காத ஆகச்சிறந்த ஸ்கோர் ஆகும். ரிஷப் பந்த் சிக்சர் மழையில் பிரெண்டன் மெக்கல்லத்தைக் கடந்து பென் ஸ்டோக்ஸிற்கு அடுத்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து அணிதான் இதற்கு முன்னால் தங்கள் சொந்த மண்ணில் பங்களாதேஷுக்கு எதிராக ஹாமில்டனில் 2019 ஆம் ஆண்டு 715 ரன்கள் எடுத்துள்ளது.

அதே போல் 1995-ஆம் ஆண்டு மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 660 ரன்கள் எடுத்தது தான் எதிரணியினர் நியூஸிலாந்தில் எடுத்த அதிகபட்ச டெஸ்ட் இன்னிங்ஸ் ரன்களாக இருந்தது. இப்போது இந்தியா ஷுப்மன் கில் தலைமையில் இதனைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதற்கு முன் அகமதாபாத்தில் 1999-ல் எடுத்த 583/7 என்பதுதான். இந்திய அணி 9 வேறுபட்ட அணிகளுக்கு எதிராக 600+ ரன்களைக் குவித்து இலங்கைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

இந்திய அணி 700+ ரன்களை அயல்மண்ணில் எடுத்த தருணங்களில் 2004-ல் சிட்னி மைதானத்தில் ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கரின் அதி அற்புதமான இரட்டைச் சதத்துடன் 705/7 டிக்ளேர் செய்தது. அது சவுரவ் கங்குலி தலைமையில் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2010-ல் இலங்கைக்கு எதிராக 707 ரன்களைக் குவித்தது. இது எம்.எஸ்.தோனி கேப்டன்சியில் இந்த டெஸ்ட்டிலும் சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் விளாசி 203 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக, இந்திய இன்னிங்ஸின் முதல் ஏழு விக்கெட்டுகளுக்கும் தலா 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்தது.

ஒட்டுமொத்தமாக, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட 50 ரன்களுக்கு மேற்பட்ட பார்ட்னர்ஷிப்கள் அமைவது இது மூன்றாவது முறையாகும்: 2007-ல் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா எட்டு பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தது. அதே நேரத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் SCG-யில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஏழு பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் ஆறு வீரர்கள் தலா 70 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் நிகழ்வு இதுவாகும். இதில் முதல் ஐந்து வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் தலா 80 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளனர்.

தொடக்க வீரராக அன்னிய மண்ணில் 8 சதங்களை விளாசி கே.எல்.ராகுல், சுனில் கவாஸ்கரின் 15 சதங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். தொடக்க வீரராக ராகுல் 12 சதங்களுடன் மொத்தமாக இணைந்த 3-ம் இடத்தில் உள்ளார்.

அதேபோல் கே.எல்.ராகுல் 7 நாடுகளில் சதங்களை எடுத்துள்ளார். அசாருதீன், சவுரவ் கங்குலி, சேவாக், விராட் கோலி ஆகியோருடன் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 10 சதங்கள் மற்றும் ராகுல் டிராவிட் 9 சதங்களை எடுத்துள்ளனர்..

அதேபோல் முதல் முறையாக நியூஸிலாந்து மண்ணில் ஆடும் ராகுல் எடுத்த 136 ரன்களும் முதல் முறை ஆடும் வீரர்களில் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பாக சுரீந்தர் அமர்நாத், மொஹிந்தர் அமர்நாத்தின் சகோதரர் 124 ரன்களை தன் அறிமுக டெஸ்ட்டில் எடுத்ததும், சுனில் கவாஸ்கர் 1976-ல் ஆக்லாந்தில் 116 ரன்களும் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ரிஷப் பந்த் 9 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர்/பேட்டராக சதங்களில் 3ம் இடத்தில் இருக்கிறார். ஆடம் கில்கிறிஸ்ட் 17 சதங்கள் ஆண்டி பிளவர் 12 சதங்கள், ரிஷப் பந்தின் தனித்துவம் என்னவெனில் இந்த 9 சதங்களில் 7 சதங்கள் அன்னிய மண்ணில் அடிக்கப்பட்ட சதங்களாகும்.

108 சிக்சர்களை அடித்து ரிஷப் பந்த் பிரெண்டன் மெக்கல்லம்மில் 107 சிக்சர்கள் சாதனையைக் கடந்தார். பென் ஸ்டோக்ஸ் 138 டெஸ்ட் சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சிக்சர் அடித்து சதம் எடுத்த வகையில் ரிஷப் பந்த் 4 முறை இவ்வாறு சதம் எடுத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 3 முறை சதத்தை சிக்சரில் எடுத்துள்ளார். இவரை விட்டால் சச்சின் டெண்டுல்கர்தான் 6 முறை சதம் எடுக்கும் போது சிக்சர் அடித்து எடுத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here