மே.இ. தீவு​கள்​ திட்​டங்​களை முறியடித்​தது எப்படி? – மனம்​ திறக்கும்​ அபிஷேக்​ சர்​மா

0
20

மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணிக்​கு எதி​ராக நேற்​று முன்​தினம்​ இந்​தூர்​ ஹோல்​கர்​ மைதானத்​தில்​ நடை​பெற்​ற 3-வது டி20 கிரிக்​கெட்​ போட்​டி​யில்​ இந்​தி​ய அணி 14 ரன்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​றது. முதலில்​ பேட்​ செய்​த இந்​தி​ய அணி 20 ஓவர்​களில்​ 223 ரன்​கள்​ குவித்​தது. தொடக்க பேட்​ஸ்மே​னான அபிஷேக்​ சர்​மா 30 பந்​துகளில்​, 5 சிக்​ஸர்​கள்​, 6 பவுண்​டரி​களு​டன்​ 69 ரன்​கள்​ விளாசி அசத்​தி​னார்​.

224 ரன்​கள்​ இலக்​குடன்​ பேட்​ செய்​த மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி​​ 20 ஓவர்​களில்​ 7 விக்​கெட்​கள்​ இழப்​புக்​கு 209 ரன்​கள்​ எடுத்​து தோல்​வி அடைந்​தது. பந்​து வீச்​சில்​ அர்​ஷ்தீப்​ சிங்​ 44 ரன்​களை விட்​டுக்​கொடுத்​து 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்​. இந்​த வெற்​றி​யின்​ மூலம்​ 5 ஆட்​டங்​கள்​ கொண்​ட டி20 தொடரில்​ இந்​தி​ய அணி 2-1 என முன்​னிலை வகிக்​கிறது.

இந்​நிலை​யில்​ 3-வது டி20 போட்​டி​யில்​ தன்​னை வீழ்த்​த மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி வகுத்​த வியூ​கங்​களை​ சமாளிக்​க புதி​ய வழிகளைக்​ கண்​டறிந்​து விளை​யாடிய​தாக அபிஷேக்​ சர்​மா கூறி​யுள்​ளார்​. இதுதொடர்​பாக அவர்​ மேலும்​ கூறிய​தாவது:

மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி எனக்​கு எதி​ராகத்​ திட்​ட​மிட்​டு வியூ​கம்​ வகுத்​திருந்​தது என்​று உறு​தி​யாகக்​ கூற​மாட்​டேன்​. ஆனால்​, அவர்​கள்​ என்​னை வீழ்த்​து​வதற்​கான திட்​டத்​தைக்​ கொண்​டிருந்​தார்​கள்​ என என்​னுடைய மனதில்​ தோன்​றியது.

எனக்​கு எதி​ராக ஆஃப்​ ஸ்பின்​னர்​ (ராஸ்​டன்​ சேஸ்​) பந்​து​வீசி​யது, அவருக்​கும்​ எனக்​கும்​ இடையி​லான ஒரு போட்​டி​யாகவே இருந்​தது. இந்​தத்​ தொடரில்​ அவர்​, சிறப்​பாகப்​ பந்​து​வீசி வரு​வ​தால்​, முதல்​ ஓவரில்​ அவருக்​கு உரிய மதிப்​பளித்​து விளை​யாடினேன்​. அதே​நேரத்​தில்​, நான்​ வகுத்​த திட்​ட​மும்​ எனக்​கு நன்​றாகக்​ கைகொடுத்​தது.

பவர்​பிளே ஓவர்​களில்​ ரன்​களை குவிக்​க வேண்​டும்​ என்​ப​தில்​ மட்​டுமே கவனம்​ செலுத்​தினேன்​. ஆனால்​, என்​னைக்​ கட்​டுப்​படுத்​த மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி ஒரு திட்​டத்​தை வைத்​திருந்​தது. அந்​தத்​ திட்​டத்​தை முறியடிக்​கும்​ வகை​யில்​ நான்​ இன்​னும்​ சிறப்​பாக விளை​யாட வேண்​டி​யிருந்​தது.​

நான்​ திட்​ட​மிட்​டு யோசித்​துப்​ பார்த்​து ஒவ்​வொரு ஷாட்​டை​யும்​ விளை​யாடு​வது இல்​லை. மைதானத்​தில்​ பீல்​டர்​கள்​ எவ்​வாறு நிறுத்​தப்​பட்​டுள்​ளனர்​ என்​ப​தைப்​ பார்த்​து அதற்​கு தகுந்​த​வாறு இயல்​பான ஷாட்​களை விளை​யாடு​கிறேன்​.

மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணிக்​கு எதி​ராக விளை​யாடும்​ போது, ஆட்​டம்​ இப்​போது நம்​ பக்​கம்​ வந்​து​விட்​டது என்​று ஒரு​போதும்​ உறு​தி​யாகக்​ கூற முடி​யாது. ஏனெனில்​ 2-வது போட்​டி​யில்​ இதை நாம்​ பார்த்​தோம்​. அந்​த அணி​யை பொறுத்​தவரை​யில்​ களத்​தில்​ நில​வும்​ சூழலுக்​கு ஏற்​ப, களமிறங்​கும்​ எந்​தவொரு பேட்​ஸ்​மே​னாலும்​ மிக எளி​தாக ஆட்​டத்​தைத்​ தங்​கள்​ பக்​கம்​ திருப்​ப முடி​யும்​. எனவே, இந்​த விஷ​யத்​தை மனதில்​ வைத்​தே நாங்​கள்​ விளை​யாடினோம்​.

மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி மீண்​டும்​ ஆட்​டத்​துக்​குள்​ வரு​வதற்​கு ஒரு சிறிய வாய்ப்​பைக்​கூட வழங்​கக்​ கூடாது என்​றும்​ முடிவு செய்​தோம்​. ஷமர்​ ஸ்பிரிங்​கர்​ பேட்​டிங்​ செய்​த விதம்​ என்​னை உண்​மை​யிலேயே ஆச்​சரியப்​படுத்​தி​யது. அவர்​, விளை​யாடிய ஷாட்​கள்​ எளி​தானவை அல்​ல. மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி 50 ரன்​களுக்​கு 5 விக்​கெட்​டு​களை இழந்​தா​லும்​ கூட நாம்​ எச்​சரிக்​கை​யாக இருக்​க வேண்​டும்​. ஆட்​டத்​தின்​ போக்​கைத்​ தங்​களுக்​குச்​ சாதக​மாக மாற்​றும்​ திறன்​ அந்​த அணிக்​கு இருக்​கிறது. இதை உணர்ந்​தே, இந்​த முறை நாங்​கள்​ மிகுந்​த எச்​சரிக்​கை​யுடன்​ தயா​ராக இருந்​தோம்​. இவ்​வாறு அபிஷேக்​ சர்​மா கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here