பொங்கல் விழாவை சென்னையின் எஃப்சி (கால்பந்து கிளப்) அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் கிளப் அணிக்காக விளையாடும் சீனியர் மற்றும் ஜூனியர் அணி வீரர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இதில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உறியடி, கயிறு இழுக்கும் போட்டியிலும் கிளப் வீரர்கள் களமாடி அசத்தினர். வீரர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையின் எஃப்சி அணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருவிரல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியா, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் மீண்டுள்ள லுங்கி நிகிடி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதேவேளையில் ஜெரால்டு கோட்ஸி, நந்த்ரே பர்கர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை....
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் இன்று (ஜனவரி 14) இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலர் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும். தொடக்க நாளான இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி சீன தைபேவின்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியன் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரான சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-2), 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி...
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெலராஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நேற்று மெல்பர்னில் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபென்ஸுடன் மோதினார். இதில் சபலென்கா...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்வார் என்றும், அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில தொடர்களில் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மோசமாக உள்ளது. அவரது தலைமையிலான பல போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும் அவரது பேட்டிங்கும் மோசமாகியுள்ளது. இதுதொடர்பாக விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குகுழுக் கூட்டத்தில் சைகியா போட்டியின்றி புதிய செயலராக தேர்வானார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், 28-வது வயதில்...
பெட்வே எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை டக்வொர்த் லீவிஸ் & ஸ்டெர்ன் விதிமுறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி. தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 141...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். இந்திய அணிக்காக விளையாடியவர். இந்நிலையில் யோக்ராஜ் சிங் நேற்று கூறியதாவது: கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2025-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று மும்பையில் ராஜீவ் சுக்லா கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டி மார்ச் 23-ம்...