எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார்? யார்?’ என பார்ப்போம். பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர், 40 ரன்கள் சேர்த்திருந்தார். இருப்பினும் முதல் 4 டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை எனவும், தனது விக்கெட்டை...
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் 380 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 150.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆர்.கே.ஜெயந்த் 91, ஆர்.பிரவீன் 42 ரன்கள் விளாசினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி 20 தொடரின் 2-வது ஆட்டம் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (12-ம் தேதி) காலை 11...
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா...
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆடவர் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் எதிரெதிர் பகுதியில் இடம் பெற்றுள்ளனர். இதனால் இவர்கள், இறுதிப்போட்டியிலேயே நேருக்கு நேர் சந்திக்க...
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 11 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்திய அணி ஸ்மிருதி மந்தனா தலைமையில் களமிறங்குகிறது. அயர்லாந்து அணி கேபி லூயிஸ் தலைமையில் விளையாடுகிறது. இரு அணிகளும் ஒருநாள்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து அசத்தியது. 48-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் தனது பகுதியில் இருந்து புய்தியாவுக்கு பந்தை...
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி, விளையாட்டு உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை...