பிசிசிஐ செயலராக தேவஜித் தேர்வு

0
64

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குகுழுக் கூட்டத்தில் சைகியா போட்டியின்றி புதிய செயலராக தேர்வானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், 28-வது வயதில் அசாம் மாநிலம் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். அசாம் மாநில அணிக்காக சில போட்டிகளில் தேவஜித் சைகியா விளையாடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்திறன் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்திலும் புதிய செயலர் சைகியா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தின்போது பிசிசிஐ-யின் புதிய பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here