ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருவிரல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியா, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் மீண்டுள்ள லுங்கி நிகிடி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
அதேவேளையில் ஜெரால்டு கோட்ஸி, நந்த்ரே பர்கர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. சாம்பின்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 21-ம் தேதி கராச்சியில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 25-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், மார்ச் 1-ல் இங்கிலாந்தையும் சந்திக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: தெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், டோனி டி சோர்சி, எய்டன் மார்க்ரம், ராஸி வான் டெர் டஸ்சென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்க்கியா, காகிசோ ரபாடா.