Google search engine
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி வெளியேறியுள்ளது. ஸ்டட்கார்டில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கோல் பதிவு செய்தது ஸ்பெயின். ஆட்டத்தின்...
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் முதன்முறையாக ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. இன்று (6-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தவகையில் 5 ஆயிரம் வீரர்கள்கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்த லீக் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை உட்பட 38 மாவட்டங்களிலும் 38 இடங்களில்...
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்க...
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்...
தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம் மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகளஅணியை இந்திய தடகள சங்கம்அறிவித்துள்ளது. இதில் தமிழகவீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டு திருவிழாவில் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்....
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பையில் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் அவர் இதனை தெரிவித்தார். இதில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றிருந்தார். அவரது பந்து வீச்சு இதில் அபாரமாக இருந்தது. இந்த சூழலில்...
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு...
வெற்றிக் கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். பின்னர் மதியம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது....
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் 2-1 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி அணி. ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்றநாக்-அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் துருக்கி - ஆஸ்திரியாஅணிகள் மோதின. முதல் நிமிடத்திலேயே துருக்கி கோல் அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து அர்டா குலர் அடித்த பந்தை அப்துல்கரிம் பர்தாக்கி துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார்....