Google search engine
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, சத்தீஸ்கரை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதி ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, கேரளாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 32-29...
குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அரியானா ஓபராய், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவளையில் ஜூனியருக்கான பேலன்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓசியானா தாமஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்களின் செயல் திறனால் இந்த தொடரில் தமிழக அணி பதக்க பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது.
ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘காட்சிப்பிழை’யில் ஏற்பட்ட மோசடி என்று கடுமையாகச் சாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. உதாரணத்துக்கு சூழ்நிலையை மாற்றி...
ஈஷா யோகா மையம் சார்​பில் நடத்​தப்​பட்ட 16-வது கிராமோத்சவ விளை​யாட்டுத் திரு​விழா நேற்று நிறைவடைந்தது. ஈஷா சார்​பில் கிராமோத்​சவம் விளை​யாட்டுத் திரு​விழா நடப்பு மாதம் தொடங்​கியது. முதல்​கட்ட போட்​டிகள் தமிழ்​நாடு, ஆந்திரா, தெலங்​கானா, கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களில் 162 இடங்​களில் நடத்​தப்​பட்டன. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த 43,144 வீரர், வீராங்​கனைகள் பங்கேற்​றனர். ஆண்களுக்கான வாலிபால், பெண்​களுக்கான த்ரோபால் போட்​டிகளில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான போட்​டிகள்...
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 339 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற 340 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள்...
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகள் பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். உலக ரேபிட் செஸ் போட்டியில் ஹம்பி வெல்லும் 2-வது...
டிரைவராக பணிபுரியும் முன்னாள் தடகள வீரருக்கு மும்பை இளம் தொழிலதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்யன் சிங் குஷ்வா. இவர் ஒரு முறை ஓலா டாக்ஸியில் செல்லும்போது அந்த காரை ஓட்டிய டிரைவர் பராக் பாட்டீல் என்பவர் முன்னாள் தடகள வீரர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 2 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பராக் பாட்டீல்...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. செஞ்சுரியனில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு எஃப்சி அணி தனது கடைசி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி மும்பையிடம் தோல்வி அடந்திருந்தது. பெங்களூரு எஃப்சி...