Google search engine
சட்டப்பேரவையில், 2023-24 நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுதாக்கல் செய்து பேசியதாவது: பேரவையில் வைக்கப்பட் டுள்ள இறுதிதுணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி நிதிஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில், ரூ.26,590.09 கோடி வருவாய்கணக்கிலும், ரூ.3,499.98 கோடி மூலதன கணக்கிலும், ரூ.265.25 கோடி கடன் கணக்கிலும் அடங்கும். சட்டப்பேரவையில் 2023-24-ம்ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் கடந்த 2023 அக்டோபர் 9-ம் தேதி தாக்கல்...
தமிழக சட்டப்பேரவையில் நேற்றுநடைபெற்ற விவாதத்தில் யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது என்பது தொடர்பாகதிமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து திமுக-அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதில்5 வயதுக்குட்பட்ட 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு...
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலையும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்: அமைச்சர் தங்கம் தென்னரசு: கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு...
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜு விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது: வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் உட்பட பல நிவாரண உதவிகளை செய்து விவசாயிகளை கைதூக்கி விட்டது அதிமுக அரசு. இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் 1 கோடியே 6...
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அம்சங்கள்: 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்....
கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் திமுக நடத்திய ‘ரகசிய சர்வே’ முக்கியப் பங்கு வகிக்கிறது. திமுக நடத்திய ரகசிய சர்வேயில், வடசென்னை கலாநிதி வீராசாமி, சேலம் பார்த்தீபன், திருநெல்வேலி ஞானதிரவியம், வேலூர் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி,...
முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வரும் நிதியாண்டில் ரூ.101 கோடி அளவுக்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக புத்தொழில் மாநாடு’, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும்.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும்...
நெருக்கடியான சூழல்கள் இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் ஆரோக்கியமாகவே உள்ளது என்று நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணவீக்கத்தைப் பொறுத்த வரை தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார வளர்ச்சி போன்று பணவீக்கமும் முக்கியம். பணவீக் கத்தைக்...
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக்...