Google search engine
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமைசென்னை நந்தனத்தில் நடத்தின.இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் இளைஞர்கள் நல விழா சென்னை கோட்டூர்புரம்...
மக்களுடன் முதல்வர’ திட்டத்தின்கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில்,1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலர்களைத் தேடிச்சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்றுகுறை கேட்டுத் தீர்த்து வைக்க விரும்பினார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது...
உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசிடம் நிதி பெறஎங்களுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். சென்னை மெட்ரோ...
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட காக்கி சீருடை அணியும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு...
சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை...
டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்றுதமிழக பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து,...
நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய...
சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப்படையாக வைத்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க உள்ளனர். போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர். இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர்...
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில்,...
அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை தொகுதியில் சீட் பெற திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார்.மக்களவைத் தேர்தலில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியாவது சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த ஜன.29-ம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை...