Google search engine
காஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் செங்கையில் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து நீதித் துறையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முதன்மை மாவட்ட, அமர்வு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிஅனிதா சுமந்த் நேற்று புதிய நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதேபோல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு என மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும்...
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம்...
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்குப் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7,061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில்,...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை மாநகரில் அமைந்துள்ள அதன் 18-க்கும் மேற்பட்ட கிளைகள் அனைத்திலும், அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 1-ம் தேதி முதல்...
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயபுரத்தில் நேற்றுநடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். யாரையும் நம்பி நாங்கள் இல்லை: பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...
பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியதால் தமிழகத்துக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின்விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற...
அரசு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொண்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி பல்லடத்தில்பேசியபோது, 10 ஆண்டுகளில்மக்களுக்கு அவர் செய்ததுஎன்ன என்பது குறித்து பெரிதாகக்குறிப்பிடவில்லை. மாறாக, திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைவிமர்சிப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்துப் பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். அவர்கள் தங்களையும், தங்கள் செல்வாக்கையும், தங்கள் மீதுமக்கள்...
கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து புதிதாக கல்லுாரிகள் தொடங்கவும், கோயில் நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மயிலாப்பூரைச் சேர்ந்தஇண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளையின் நிர்வாகியும், ஆலய வழிபாட்டுக் குழுத் தலைவருமான டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம்,...
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாகசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். உயர்...
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது.கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை இரு கட்சிகளும் 3 தொகுதிகள் கேட்டன. இந்நிலையில் நேற்று அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு முதலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம்.பி.தலைமையிலான...