அரசு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொண்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி பல்லடத்தில்பேசியபோது, 10 ஆண்டுகளில்மக்களுக்கு அவர் செய்ததுஎன்ன என்பது குறித்து பெரிதாகக்குறிப்பிடவில்லை. மாறாக, திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைவிமர்சிப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்துப் பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.
அவர்கள் தங்களையும், தங்கள் செல்வாக்கையும், தங்கள் மீதுமக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பையும் நம்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இதன்மூலம்அதிமுகவின் வாக்கு வங்கியைப் பெற முடியும் என்றும், அதிமுகவைபலவீனப்படுத்த வேண்டும் என்றும்பாஜக கணக்கு போடுகிறது. அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பாஜகவுக்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால், தமிழகத்துக்கு பெரிய தீங்கு விளையும். தூத்துக்குடியில் அரசு விழா என்பதை மறந்துவிட்டு, திமுகமக்களவை உறுப்பினர் மேடையில் இருக்கிறார் என்பதையும் மறந்துவிட்டு, அரசியல் பிரச்சார மேடையாக அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய பொறுப்புக்கு இது அழகல்ல.
எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், பரப்புரைகளை மேற்கொண்டாலும், தமிழகமக்கள் நம்ப மாட்டார்கள். பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.