இந்து மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்: சர்ச்சை பேச்சுகளால் பரபரப்பு
admin - 0
இந்து மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தின. அப்போது எழுந்த சர்ச்சைபேச்சுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில்...
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.பிரவீண் சமாதானம் தாக்கல் செய்துள்ள மனுவில், “துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது. கட்சி பாகுபாடின்றி நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய துணை முதல்வர் கட்சி சின்னத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினால் அது திமுக வின் சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை...
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின்...
சென்னை, காமராஜர் துறைமுகங்களில் ரூ.187 கோடியில் 4 உள்கட்டமைப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
admin - 0
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ரூ.187 கோடி மதிப்பிலான 4 உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை பாதுகாப்பாக வைப்பதற்காக 4 கிடங்குகள் ரூ.73.91 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல், துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில் ரூ.4 கோடிமதிப்பில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை கொண்டு செல்வதற்காக ரூ.88.91 கோடி மதிப்பில் இரட்டை ரயில்...
தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
admin - 0
தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால் புறநகர் பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31-ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர் செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. சிறப்புப் பேருந்துகளில் மட்டும் சுமார்...
தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், முதல்வரின் தொகுதியான கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக...
கடந்த வாரம் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நேற்று 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால், அப்பள்ளியை ஏராளமான பெற்றோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த அக்.25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறலும் வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில்...
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை: சிலரிடம் மறுவிசாரணை மேற்கொள்ள முடிவு
admin - 0
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற நேரத்தில் செல்போன் பயன்படுத்திய 200 பேரின் பட்டியலை தயாரித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.
இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக தமிழக...
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும்...
கட்சி மறுசீரமைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்: விசிக-வினருக்கு திருமாவளவன் வலியுறுத்தல
admin - 0
கட்சியின் மறுசீரமைப்பையொட்டி நடைபெறும் மாற்றங்களுக்கு பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது: விசிக கட்சியின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த, சட்டப்பேரவை தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களை மறுசீரமைப்பு செய்து சிலரை விடுவிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து 144...










