கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும், வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் தொழிலாளர் நலத் துறையும், தொழிலாளர் நல அமைச்சகமும் ஏற்படுத்தப்பட்டன.
தொழிலாளர்களுக்கான...
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை அறநிலையத் துறை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 1,300 ஆண்டுகள் தொன்மையானது. இந்தக் கோயிலுக்கு இறுதியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில்,...
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை....
பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வசூலில் புதிய மைல்கல்: அந்த...
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகருக்கு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர், கழிவுநீர் கலந்து நிறம் மாறி இருந்ததாகவும், இதை அருந்திய அப்பகுதி மக்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது....
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி
admin - 0
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பி.ஆர்.அம்பேத்கரின் 69-வது நினைவு தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து, வெவ்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார். அதன்படி நடிகர் பிரேம்ஜி, பாடகர்கள்...
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முறைகேடுகள், விதிமீறல்கள் கண்டறியப்படும்போது, விசாரணை நடத்தி,...
வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பல்லாவரத்தில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆய்வு
admin - 0
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்ற புகாரின் அடிப்படையில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்லாவரம் தொகுதி...
மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது தங்களின் நாட்டுக்கோ வரவழைத்து, அம்மக்களை ‘சைபர் க்ரைம்' உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுத்து கின்றனர். அப்படி பாதிக்கப்பட் டவர் ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும்...
“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு
admin - 0
சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், நூலை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் பேசிய தாவது:இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? நம் நாடு...










